நீண்ட எதிர்பார்ப்புகளிடையே வெளியாகிறது விஸ்வாசம் பாடல்!! வெளியாகும் நேரம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


விஸ்வாசம் படத்தின்  சிங்கிள் டிராக் இன்று வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. 

 நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து "விஸ்வாசம் " படத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் "விஸ்வாசம் " படத்தில் கைகோர்த்துள்ளார். 


இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்க, சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்கிறார்.  

            

நடிகர் அஜித்தும், சிவாவும் தீவிரமான சாய்பாபா பக்தர்கள் என்பதால், சாய்பாபாவுக்கு உகந்த தினமான வியாழக்கிழமை படத்தின் முதல் பார்வை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி அதிகாலை 03:40 மணியளவில், விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.  

          
              
இதையடுத்து தல ரசிகர்கள், படத்தின் செகண்ட் லுக் வெளியிடுமாறு படக்குழுவை கேட்டு கேட்டுக்கொண்டனர். அதன் படி, விஸ்வாசம் படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர் கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விஸ்வாசம் படத்தின் இரண்டாம் பார்வை ( Second look) வெளியிடப்பட்டது. 

அதன் பின் விஸ்வாசம் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என்பதால் படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள். 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viswasam Movie Update : Single Track In Today


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->