"ராதாரவி பெயரை மாற்ற வேண்டும்" நயன்தாராவிற்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகர்!! இது தான் காரணமா?!  - Seithipunal
Seithipunal


மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் "கொலையுதிர் காலம்" படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த விழாவில் பேசிய பழம்பெரும் நடிகர் ராதா ரவி, நயன்தாரா குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டார். இது இணையத்தில் வைரலாகி தற்போது சர்ச்சையை கிளப்பியது.

இதனை தொடர்ந்து அவரை திமுக தற்காலிகமாக நீக்கம் செய்தது. ஆனால், ராதாரவி 'நான் முழுமையாக கட்சியை விட்டு விலகிக் கொள்கிறேன்' என விலகிவிட்டார்.

ராதாரவியின் பேச்சினை கண்டிக்கும் விதத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், " அன்புள்ள ராதாரவி சார். ஆம், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் உங்களுக்கு எதிரான இந்த கண்டனக் கடிதத்தில் கையெழுத்திடுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். 



அண்மையில் நீங்கள் வெளிப்படுத்திய முட்டாள்தனமான பேச்சு அதுவும் பெண்களை மையப்படுத்தி நீங்கள் பேசியதை கண்டிக்கிறேன். வளருங்கள் சார். இனிமேல் உங்களை நீங்கள் ரவி என்று மட்டுமே அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா? என தெரிவித்துள்ளார். 

நயன்தாராவுடன் விஷால் சத்யம் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். அதன்பின்னர் இருவரும் நட்பில் இருந்துள்ளனர். இருப்பினும், நடிகர் சங்க பொதுச்செயலாளராக இதை கண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் நடிகர் விஷால் இருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vishaal scolding radharavi on twitter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->