இதற்காகத்தான் மெர்சல் இந்த பாடுபடுகிறதா..? அதிரவைக்கும் அரசியல் பின்னணி..? - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் மத்திய பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி, ரொக்கமில்லா பரிமாற்றம் பற்றி ஏற்படுத்த முயலும் பிம்பம் ஆகியவற்றை விமர்சிக்கும் இரண்டு உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூரோடு ஒப்பிடுவதாகவும் ஒரு உரையாடல் அமைந்துள்ளது.இது நாட்டைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்த உரையாடல்களை நீக்காவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும் என்று அக்கட்சியின் தமிழகதலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். இதர பாஜக தலைவர்களும் அதே போல் இந்தப் படத்தைத் தாக்கினார்கள்.

நாட்டைப் பற்றிய தவறான எண்ணத்தை குறிப் பிட்ட உரையாடல் ஏற்படுத்தவில்லை, மத்திய ஆட்சியாளர்கள் தங்களைப் பற்றிக் காட்ட விரும்பும் தோற்றத்துக்கும், தமிழகத்தில் அரசியல் நடத்தும் நோக்கத்திற்கும் இடையூறாக இருக்கும் என்பதற்காகவே பாஜக தலைவர்கள் இவ்வாறு இந்தப் படத்தைத் தாக்குகிறார்கள் என்பது வெளிப்படை.

மத்திய அரசிடம் இருக்கும் பிரச்சார பலத்தைக் கொண்டு, திரைப்படத்தின் இந்தச் செய்திகளுக்கு மாறான தகவல்களை மக்களிடையே பரப்ப முடியும்.

அப்படிச் செய்வதற்கு மாறாக இவ்வாறு நிர்ப்பந்திப்பது, கலையின் மூலமாக ஏற்படும் தாக்கம் குறித்த அச்சத்தால்தான்.

தற்போது படத்தின் தயாரிப்பாளர்கள் மத்திய அமைச்சரைச் சந்தித்து குறிப்பிட்ட உரையாடல்களை நீக்கியிருக்கிறது.

அவர்களாக மாற்றுவது அவர்களின் உரிமை. ஆனால் ஒரு அரசியல் அச்சுறுத்தலால் ஒப்புக் கொண்டிருப்பார்களானால் அது தமிழ் திரையுலகில் கவலையளிக்கும் நிகழ்ச்சிப் போக்கேயாகும்.

ஒரு பக்கம் வழக்குப் போடப்படும் என்று சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் வேறு கெடுபிடிகளும் செய்யப் பட்டன என்றால், சட்டப்பூர்வ நடைமுறைகளில் மத்திய ஆளுங்கட்சியினருக்கு நம்பிக்கை இல்லை என்றே பொருள்.

விஜய் திரைப்படங் களுக்கு வெளியேயும் விவசாயிகள் பிரச்சனை போன்றவற்றில் விமர்சனங்களை வெளிப்படுத்தினார் என்பதோடும் இதை இணைத்துக் காண வேண்டியுள்ளது.

மக்களிடையே அரசியல், சமூக விமர்சனங்களைச் சொல்லி வந்திருக்கிற தமிழ் திரைப்படப் பாரம்பரியம் தொடர வேண்டும். அதை முடக்கும் எந்தவொரு அதிகாரபீட நடவடிக்கையும் கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயலாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Mersal, Vetri, the character played by Vijay, remarks that while a country like Singapore charges just 7 per cent GST and provides free healthcare, India, which has high GST rates, can't afford to do the same.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->