சன் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் இணைந்த விஜய் சேதுபதி! - Seithipunal
Seithipunal


விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெற்றி படமாக அமைந்தது. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது.

இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்து வருகிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

தற்போது ‘சீதக்காதி’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை போட்டிபோட்டு கொண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சி  வாங்கியுள்ளது என்று தகவல் வந்துள்ளது. பல தொலைக்காட்சிகள் போட்டிபோட்டு நிலையில், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. முன்னதாக விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற படமான '96' திரைப்படம் திரையில் ஓடி கொண்டிருக்கும்போது சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Sethupathi from Vijay TV from Sun TV


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->