இன்னும் சற்று நேரத்தில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டாவது இன்ப அதிர்ச்சி..! அதிகாரபூர்வ தகவல் வெளியானது..!! - Seithipunal
Seithipunal


சற்றுமுன் விஜய் ரசிகர்களுக்கு அவரின் 65 படத்தின் தலைப்பும், பஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. நாளை விஜயின் 43 வது பிறந்த நாள் என்பதால் இன்று இரவு மேலும் ஒரு சர்கார் படத்தின் போஸ்டரை வெளியிட போவதாக சன் பிக்ச்ர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கு ''சர்க்கார்'' என தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ''பஸ்ட் லுக் '' புகைப்படமும் மாலை 06 மணிக்கு வெளியிடப்பட்டது.



 

மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இது விஜய்யின் 62வது படம் என்பதால் தளபதி 62 என குறிப்பிடப்பட்டு வந்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.



 

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதே தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சர்கார் படத்தின் இரண்டாவது பஸ்ட் லுக் போஸ்டரும் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VIJAY SARKAR MOVIE 2ND POSTER NIGHT 12PM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->