உலகளவில் டிரெண்ட் ஆன, #VettiKattu! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


தல அஜித், சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து "விஸ்வாசம் " படத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் "விஸ்வாசம் " படத்தில் கைகோர்த்துள்ளார். 

இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்க, சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றி உள்ளது.

விஸ்வாசம் படத்தின் சில நாட்கள் முன்பு வெளியான அடிச்சி தூக்கு பாடல் யூடியூப் -ல் வெளியான சில நேரத்தில் இதுவரை பல சாதனைகளை படைத்தது வருகிறது. பாடல் வெளியான 8 நிமிடத்தில் 1 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்தனர். இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பாடலை பார்வையிட்டுள்ளனர்.  மேலும் 476K பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மிக குறைந்த நேரத்தில் அதிகப்படியான விருப்பங்கள் மற்றும் பார்வையாளர்களை கொண்டது இந்த பாடல் என்ற சாதனையை விஸ்வாசம் பிடித்தது. 

இந்நிலையில், இப்படத்தின் "வேட்டி கட்டு" என்றும் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகியுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் உலகளவில் டிரெண்ட் செய்துள்ளனர் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twitter Worldwide Trends on VettiKattu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->