பிக்பாஸ் 2 வில் முரட்டு குத்து நடிகையும், முரட்டு வில்லனும்! - Seithipunal
Seithipunal


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஒன்றாவது சீசனைத் தொடர்ந்து, இரண்டாவது சீசன்  இன்று முதல் தொடங்குகிறது. முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல் ஹாசனே இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்த இரண்டாவது சீசனுக்கும் மிகுந்த அளவில் வரவேற்பு இருக்கிறது. 

இன்று பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்கப்போகும் இடத்தைப் பார்த்துவிட்டு ஒவ்வொரு போட்டியாளர்களையும்  வரிசையாக அறிமுகம் செய்து வைக்கத்தொடங்கினார், நடிகர் கமல். 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய வெற்றிப்படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடித்திருந்தார். இவரே முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

இவரைத் தொடர்ந்து ஒரு காலத்தில் முரட்டு வில்லனாக இருந்த  நடிகர் பொன்னம்பலம் படுபயங்கரமாக அரங்கத்திற்குள் வருகை கொடுத்தார். கமல் இரண்டாவது போட்டியாளராக இவரை அறிமுகம் செய்து வைத்தார். கமல்ஹாசனுடன் நடித்த படங்களின் நடித்த அனுபவங்களை பற்றி மேடையில் நெகிழ்ந்த பொன்னம்பலம், மிகுந்த எதிர்பார்ப்புடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதன்பின் ஒவ்வொருவராக அந்த அரங்கத்திற்குள் அறிமுகப்படுத்தினார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

top most villain in big boss 2


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->