கடன் பெற்று எப்படி ஏமாற்றுவது என்று பவர் ஸ்டார் பேசிய ஆடியோ வெளியீடு! - Seithipunal
Seithipunal


நடிகரும், மருத்துவருமான பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா, கண்ணா லட்டு திங்க ஆசையா, ஐ,கோலி சோடா உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் . நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பவர் ஸ்டார் மிகவும் பிரபலமானார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென காணாமல் போய் விட்டாதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவரை சிலர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் காவல் நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி புகார் அளித்தார்.

பின்னர், சென்னையில் காவல் நிலையத்தில் ஆஜரான பவர் ஸ்டார் சீனிவாசன் தனது மனைவியை கடத்தி விட்டதாக புகார் அளித்தார். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், என்னை கடத்திய கும்பல் என் மனைவியை கடத்தியதாக என்று போலீசாரிடம் கூறினார். 

இதனையடுத்து, போலீசாரின் விசாரணையில் பவர் ஸ்டார் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து கடத்தல் நடனமாடியது அம்பலமானது. இவர் ஏற்கனவே, பணம் வசதி பெற்றவர்களிடம் கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடத்தல் நாடகம் ஆடிய பவர் ஸ்டார் சீனிவாசன், கடன் பெற்ற பணத்தை திருப்பி கொடுக்காமல் எப்படி ஏமாற்றுவது என தனது நண்பர்களுடன் உரையாடிய ஆடியோ இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தப்பட்டதாக கூறி ஊட்டியில் தங்கியிருந்த பவர் ஸ்டார் சீனிவாசன் தனது நண்பர்களுடன் கடன் பெற்ற பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது என சிரித்தபடி பேசுகிறார். அதில் முதல் ஆடியோவில், "முதலில் ஓரிரு நாளில் பணத்தை தருவதாக கூறுவோம். பணம் வாங்கிய பின்னர் பிரச்னையை கூறலாம். காவல்துறைக்கு போனால் உங்கள் பணம் அங்குதான் போகும்" என பேசியுள்ளார்.

இரண்டாவது ஆடியோவில், பவர் ஸ்டார் நண்பர் ஒருவர் "நடிகர் என்பதால் அனைவரும் நம்புவதாகவும், ஏமாற்றுவது நம் பழக்கத்தில் எப்போதும் உள்ளது" என பேசி சிரிக்கின்றார். 

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது துபாய், மலேசியா, டெல்லி, பெங்களுர் உள்ளிட்ட பல இடங்களில் பண மோசடி புகார் இருப்பதும், மேலும் அதனால் அவர் சிறை சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Power Star Talking Speech That Cheats how to get the loan!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->