அஜித் நேர்மையானவர்., அடுத்தடுத்து தமிழிசை கூறிய வார்த்தைகளால் அதிர்ச்சியில் தல ரசிகர்கள்!!  - Seithipunal
Seithipunal


திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித் என தமிழிசை புகழாரம் சூட்டியதால், தல ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். 

நேற்று திருப்பூரில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழாவில் பாஜக தமிழிசை தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கலந்து கொண்டார். அப்போது பாஜகவில் இணைவதற்காக தமிழகத்தின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களின் ரசிகர்களும் வந்திருந்தனர். 

அங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். அப்பொழுது டாக்டர் தமிழிசை அங்கிருந்த பாஜகவினரிடமும், அஜித் ரசிகர்களிடமும், " தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர் அஜித், திரைப்பட கலைஞர்களிடையே மிகவும் நேர்மையானவர் அஜித் தான் என்றும் நடிகர் அஜித் குறித்து புகழ்ந்துள்ளார். 

மேலும், "அவரைப்போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள் என்றும், அஜித் ரசிகர்கள் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும்" அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் அஜித்தை இவ்வாறு தமிழிசை அவர்கள் புகழ்ந்து கூறியுள்ளதால், தல ரசிகர்கள் உற்சாகத்தில் இருப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thamilisai says about thala ajith


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->