தெலுங்கு பெண்ணுக்கும் நடிகர் விஷாலுக்கும் திருமணமா?! - Seithipunal
Seithipunal


நடிகர் விஷால் விரைவில் தெலுங்கு பெண் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால், தமிழ் நடிகர்கள் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார். நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமால் இருந்து வரும் விஷால், சரத்குமாரின் மகள், வரலட்சுமி சரத்குமாரை காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு அவர்கள் இருவருமே மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.  

இதனிடையே, நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின், அதன் திருமண மண்டபத்தில் நடக்கும் முதல் கல்யாணம் தன்னுடையதுதான் என்று கூறினார். அதேபோல், தான் திருமணம் செய்யும் பெண் லட்சுமி போல இருப்பார் எனக் கூறியுள்ளார். 

நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் டிசம்பர் மாதம் கட்டி முடிக்கப்பட உள்ள நிலையில், நடிகர் விஷால் தெலுங்கு பெண் ஒருவரைத் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தெலுங்கு பூர்விகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் குடும்பத்தினர் தெலுங்கு பெண்ணை மணமுடிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telugu woman married in actor vishal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->