தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த லியோ!  - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 6,000 திரைகளில் வெளியாக்கி முதல் நாளில் அதிகமான வசூலை ஈட்டிய முதல் இந்திய படமாக உள்ளது. 

இதுவரை வெளியான தமிழ் படங்கள் அதிவேகமாக வசூலித்த படம் லியோ தான் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. 

லியோ திரைப்படம் 6 நாட்களில் ரூ. 500 கோடி வசூலை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்தன. மேலும் அமெரிக்காவில் அதிக வசூலை குவித்த முதல் இந்திய படம் லியோ தான் என தகவல் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தற்போது அதிகாரப்பூர்வமான வசூல் விவரத்தினை அறிவித்துள்ளது. 

7 நாட்களில் லியோ ரூ. 461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூலை குவித்த படங்களில் முதல் இடத்தில் லியோ இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இயக்குனர் ரத்ன குமார், ''அவர் நம்பர் 1 என எங்கும் தெரிவிக்கவில்லை. யார் வேண்டுமானாலும் நம்பர் 1 ஆகலாம் என நிரூபித்துள்ளார்'' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil cinema new record Leo 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->