தேவை இல்லாமல் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.! நடிகை ஸ்ரீரெட்டி விடுத்த எச்சரிக்கை.!! அவருக்கு எதிராக பேசினால் அவர் என்ன செய்வாராம் தெரியுமா.?!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு நடிகை, ஸ்ரீரெட்டி நடத்திய அரை நிர்வாண போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம் சாட்டினார்.

முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இளம் நடிகர் சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். பிரபல நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதி ஆகியோரும் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கினர்.

இதையடுத்து, முன்னணி நடிகைகள் வெளிநாடு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள், இங்கு ஒரு வருடத்தில் சம்பாதிக்கும் வருமானத்தை அங்கு சென்று ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவார்கள் எனவும் இந்த விவகாரத்தில் அமெரிக்க காவல்துறையினருக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து விசாரணைக்கு உதவி வருகிறேன்” எனவும் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது முகநூலில் “நடிகர் சங்கத்திடம் பேச இருக்கிறேன். திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேச இருக்கிறேன். மேலும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் எனக்கு எதிராகவோ அல்லது பெண்களின் பிரச்சனைகளுக்கு எதிராகவோ பேசினால், சட்டம் 294 மற்றும் 509 படி பெண்களின் மீதான வன்முறை மற்றும் ஈவ்டீசிங் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பாயும். எனவே, தேவையில்லாமல் பிரச்சனைகளில் சிக்கி கொள்ளாதீர்கள். நான் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri reddy warning in facebook


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->