அவர் மட்டும் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், நடப்பதே வேறு..!! ஸ்ரீரெட்டி பகீர்..!!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு நடிகை, ஸ்ரீரெட்டி நகைகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை வெளிப்படையாக பொதுவெளியில் தெரிவித்து, நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த விடயம் தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம் சாட்டினார்.

முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருவது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இளம் நடிகர் சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். மேலும் இயக்குநர் சுந்தர்.சி, ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கினார்.

இவர்களைத் தொடர்ந்து, நடிகர் ஆதியின் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி மீது விஷால், சுந்தர் சி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக டி.ஆர் பேட்டியளித்தார். 

நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பேட்டியளித்து, முன்னணி நடிகைகளை பற்றி தகவல்களை கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் என்று தல அஜீத்தின் பெயரை குறிப்பிட்ட அவர், ''ஒரு நடிகருக்கான எல்லா தகுதி அவரிடம் உள்ளது'' என அவர் கூறினார்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் நீதி கிடைத்திருக்கும். அவரது ஒரே பார்வை என்னை காப்பாற்றியிருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஒரு பதிவில் ''ஜெயலலிதா தான் தனக்கு இன்ஸ்பிரேஷன்'' என்று ஸ்ரீரெட்டி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srireddy talk about justice


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->