ரஜினி பட நாயகியையும் விட்டு வைக்காத அமேசான் நிறுவனம்.! ஆசையாக ஹெட்போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தது என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் தமிழில் இவர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் அமேசான் இணையதளத்தில் ரூ 18000 க்கு ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார். பின்பு டெலிவரி செய்யப்பட்ட பின் அதை ஆசையுடன் பிரித்து பார்த்துள்ளார்.

 அதில் துருப்பிடித்த ஆணி மற்றும் இரும்புகள் இருந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சோனாக்ஷி கோபமாக இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:




அமேசான் இணையத்தளத்தில் போஸ் ஹெட்போனை ஆர்டர் செய்தேன். வந்த பேட்டி பிரிக்காமல், சரிவர  அழகாக மூடப்பட்டிருந்தது.ஆனால் அது வெளியே மட்டும்தான்.உங்களூடைய வாடிக்கையாளர் சேவை எனக்கு உதவி செய்ய தயாராக இல்லை. இது மிகவும் மோசம் என பதிவிட்டுள்ளார். 



மேலும் யாருக்காவது ரூ.18 ஆயிரத்திற்கு பளபளக்கும் குப்பை வேண்டுமா? என்று கேட்டு நக்கல் செய்து பதிவு ஒன்றையும் சோனாக்ஷி வெளியிட்டுளளார்.

இவ்வாறு சில நாட்களுக்கு முன் பிரபல நடிகருமான நகுல்
பிளிப்கார்டில் ரூ.1.25 க்கு ஐபோன் ஆர்டர் செய்து அது போலியானதை தொடர்ந்து அந்நிறுவனம் அவருக்கு பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sonakshi simha cheated by amazon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->