அஜித்திடம் இருந்து இந்த பொருளை ஸ்கெட்ச் போட்டு தூக்க ஆசையாம் : சினிமா பிரபலம் ஓபன் டாக்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் என்றாலே பெரும்பாலும் பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

இவருக்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, இவர்கள் நடிகர் அஜித் சார்ந்த எந்தவொரு விசயத்தையும் கொண்டாடாமல் இருந்தது இல்லை.

அஜித்தின் படங்கள், பிறந்த நாள் என இவரை சம்மந்தபட்ட எந்தவொரு சிறிய விஷயம் என்றாலும் அதை ரசிகர்கள் பெரிதாகவே கொண்டாடுவார்கள்.

இவர் படங்கள் வெளியாவதென்றால் திரையரங்குகள் அனைத்தும் திருவிழா போல் காட்சியளிக்கும். இவருடைய ஸ்டைல், பைக் ஓட்டும் விதம் போன்ற செயல்கள் பலரையும் எளிதில் கவரும் வகையில் இருக்கும்.

அதேபோல் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் விக்ரம், இவர் தான் நடிக்கும் படங்களுக்காக மெனக்கெட்டு மிகவும் கடினமாக உழைப்பவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்திற்காக ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகர் விக்ரம்.

அந்த நிகழ்ச்சியின் போது அவரிடம், நீங்கள் ஒரு பொருளை திருட ஆசைப்பட்டால் எந்த நடிகரிடம் இருந்து எந்த பொருளை திருடுவீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த விக்ரம், தல அஜித்திடம் இருந்து அவரது பைக்கை திருட ஆசை என்று கூறியுள்ளார். அதனை கேட்ட தல அஜித் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sketch this item from Ajith


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->