புதிய கூட்டணியில் இணைந்த சிவகார்த்திகேயன்..! - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் பெரிய பட்ஜெட் படம் இது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும், 'இரும்புத்திரை' படத்தை இயக்கிய, மித்ரன் இயக்கத்தில் ’ஹீரோ’  படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சீமராஜா படத்தைத் இயக்குநர் ரவிக்குமாரின் படத்திலும் நடிக உள்ளார்.

இந்நிலையில், தனது நீண்ட கால நண்பரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.   

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகவுள்ள இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இரண்டாவது படமாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sk act in lyca production


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->