சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் கதாநாயகனாக, விஜய் டிவி பிரபலம்! - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து, தற்போது சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகராக வளர்ந்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் இதுவரை 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளர். தமிழ் சினிமாவில் அதிக வசூல் புரியும் டாப் 5 முன்னணி நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் உள்ளார்.

படத்தில் நடிப்பதுடன், எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி கனா என்ற படத்தை தயாரித்துள்ளார்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் தொலைக்காட்சி புகழ் ரியோ கதாநாயனாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக சிரின் கஞ்சவாலா நடிக்கிறார். 

இவர்களுடன் ராதா ரவி, விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் பலரும் நடிக்கின்றனர். யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakarthikeyan next movie join in rio raj


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->