இப்படி சொல்லிட்டாரே.. ஸ்ருதி ஹாசனுக்கு பெரும் ஷாக் கொடுத்த வெளிநாட்டு காதலர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இதனை தொடர்ந்து அவர் பூஜை, புலி, வேதாளம் என  பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி இந்தி தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் மட்டுமின்றி தனது இசையாலும் ஏகப்பட்ட ரசிகர்களை கட்டி இழுத்தவர. இத்தகைய பன்முகத் திறமை கொண்ட ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சால் என்பவரை காதலித்து வந்தார். மேலும் இவருடைய காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன், மைக்கேல்  இருவரும் ஒன்றாக கமலுடன் சேர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ஸ்ருதிஹாசனின் காதலை உறுதி செய்தது.

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் தன்னுடைய காதலை பிரேக்கப் செய்ததாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியானது.மேலும் மைக்கேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகின் எதிரெதிர் பக்கங்களில் தான் வாழ்க்கை நம்மை வைத்துள்ளது. அதனால் நாம் தனியாகத்தான் வாழ்க்கைப் பாதையில் செல்ல வேண்டும் என நினைக்கிறேன் என பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்த இளம்பெண் என் வாழ்க்கையின் முக்கிய சிறந்த நண்பராக, எப்போதும் இருப்பார எனவும் பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shruthi haasan breakup love with michael


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->