விஜய்க்கு வில்லனாகும் பிரபல முன்னணி பாலிவுட் நடிகர்!! ரசிகர்களை குஷியாக்கிய புதிய தகவல்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தெறி, மெர்சலை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் விஜய் 63 .இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இப்படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. 

இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் ஜாக்கி ஷெராஃப், இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் படத்தின் கடைசி 15 நிமிடத்தில் மட்டும் ஷாருக் கான் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்று கூறப்படுகிறது. எனினும் அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மேலும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது மைதான அரங்கில் ஷாருக்கான் அட்லீ அருகில் அமர்ந்திருந்தார். அதை தொடர்ந்து ஷாருக்கான் அட்லீயின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தார். அப்பொழுதிலிருந்து இந்த தகவல்கள் வெளியாகி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sharukhan act villain to vijay


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->