பிரபல பாலிவுட் சினிமா நட்சத்திரத்துடன் ஆட்டம் போட்ட 'சத்குரு'.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில், இயங்கி வரும் ஈஷா யோகா பயிற்சி நிலையத்தின், அதிபரான சத்குரு ஜக்கி வாசுதேவ், யோகா பயிற்சியின் மூலம் பிரபலமானவர். இவர் இந்தியா மட்டுமின்றி உலகப்புகழ் பெற்றவர் ஆவார். இவரது யோகா பயிற்சி முகாம், இந்தியாயாவின் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கடந்த 21 தேதி பெங்களூர் ஐஐஎம் நடத்திய லீடர்ஷிப் கான்கிளேவ் நிகழ்ச்சி தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மேடையில் ரன்வீர் சிங் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போது, அவருடன் இனைந்து சத்குருவும் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். இவர்கள் இருவரும் நடனமாடியதை கண்டு மகிழ்ச்சியடைந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் எழுந்து நின்று கை தட்டினர். மேலும், இந்த வீடியோவை ரன்வீர் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sathguru dance with ranvir singh


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->