டாக்டர் அன்புமணி கொள்கையை ஏற்றுக்கொண்ட, முதல் பிரபல முன்னணி நடிகை..!! பரபரப்பு பேட்டி..!!! - Seithipunal
Seithipunal


திரைப்படங்களில் முன்னணி நடிகர்கள் புகை பிடிப்பது போன்ற காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகை கவுதமி பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.

இயக்குநர் முருகதாஸ் இயக்கி, விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. 

இதற்கு பாமக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், பசுமை தாயகம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, தமிழக அரசு சர்கார் படத்தின் குழுவுக்கு நோட்டிஸ் அனுப்பியது.

இதனை அடுத்து,  சர்கார் படத்தின் ஃபோஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது. இந்த விடயம் தொடர்பாக, விவரம் அறியாத விஜய்சேதுபதி ஒரு கருத்தை கூற, அதற்கு பசுமைத்தாயகம் விளக்கமான, விளங்கும் படி ஒரு பதிலையும், அவருக்கு கண்டனத்தையும் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களை கவுரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவுதமி, சமூகவலைதளங்கள் மூலம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அதிகம் பகிரப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கவுதமி, ''திரைப்படங்களில் உச்சத்தை தொட்ட நடிகராக இருந்தாலும் , புகைப்பிடிக்கும் காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று தெரிவித்தார். தமிழ் திரைத்துறையில், அன்புமணியின் கொள்கை முதலில் ஏற்று கொண்ட முதல் நடிகை, "நடிகை கவுதமி'' மட்டும் தான். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SARKAR FIRST LOOK POSTER ISSUE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->