சாந்தனு பட நாயகிக்கு காதலனுடன் விரைவில் கல்யாணம், மாப்பிள்ளை யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சாந்தனுவிற்கு ஜோடியாக நடித்து, சித்து பிளஸ்2 என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி. 

இவர் அதனை தொடர்ந்து வில் அம்பு, என்னோடு விளையாடு,கட்டப்பாவ காணோம், ராஜா ரங்கூஸ்கி, மன்னர் வகையறா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

   

மேலும் தற்போது அவர் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சாந்தினியும், வில் அம்பு, இரும்புத்திரை, பியார் பிரேமா காதல் உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த நந்தா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.  

இந்நிலையில் இருவருக்கும் இருவீட்டாரது சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

மேலும் வரும் டிசம்பர் 12ல் இவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்கவுள்ளது. தொடர்ந்து 16ம் தேதி மாலை 6 மணிக்கு, சென்னை மேயர் ராமநாதன் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. 
இந்நிலையில் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

santhanu marry her lover nandha


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->