#Breaking : சற்றுமுன் வெளியான செய்தி: ரஜினியுடன் இணைகிறார், தந்தி டிவி ரங்கராஜ் பாண்டே !!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினி ஆரம்பிக்கும் புதிய தொலைக்காட்சியை ரங்கராஜ் பாண்டே  நிர்வகிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இறுதியில் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். மேலும் வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்தார்.   
   
கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்த அடுத்த நாளே பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்கள், பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்கள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து ஒரே குடைக்குள் கொண்டு வருவதற்காக புதிய இணையதளத்தையும்,மொபைல் ‘ஆப்’பையும் ரஜினி தொடங்கினார். 

இதை தொடர்ந்து, நடிகர் ரஜினி புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க இருக்கிறார். இதற்காக ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகி வி.எம்.சுதாகர் அனுமதி கேட்டு  விண்ணப்பித்துள்ளார். 

அதாவது, ரஜினி கட்சி டெலிவி‌ஷனுக்கு மூன்று பெயர்கள் தேர்வு செய்துள்ளனர். சூப்பர் ஸ்டார் டி.வி., ரஜினி டி.வி., தலைவர் டி.வி. ஆகிய மூன்று பெயர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த 3 பெயர்களில் “சூப்பர் ஸ்டார் டி.வி.” எனும் பெயருக்கு முன்னுரிமை கொடுத்து டி.வி. சேனல் பெயருக்கு அனுமதி வழங்கும்படி சுதாகர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதனால், ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.   

இந்த நிலையில், ரஜினி ஆரம்பிக்க இருக்கும் புதிய தொலைக்காட்சியை, ரங்கராஜ் பாண்டே நிர்வகிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. தந்தி டிவியின் தலைமை செய்தியாளராக இருந்த பாண்டே சில நாட்களுக்கு முன்பு தான் தந்தி டிவியில் இருந்து விலகினார்.  இந்த நிலையில், இவர் ரஜினி தொடங்க இருக்கும் தொலைக்காட்சியை நிர்வகிப்பார் என தகவல் கிடைத்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini TV Handled Rangaraj Pandey


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->