ஆத்தாடி அடுத்த படத்தில் ரஜினிக்கு ஹீரோயின் இவங்களா?! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
rajini next film with nayanthara and keerthisuresh
சமீபத்தில் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில், த்ரிஷா மற்றும் சிம்ரன் இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தனர். சிம்ரன் ரஜினி மேல் காதல் வயப்படுபவராகவும், த்ரிஷா ரஜினியின் மனைவியாகவும் நடித்தனர்.
இன்னொரு வரலாற்று செய்தி என்னவென்றால், சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவருமே ரஜினியுடன் நடித்த முதல் படம் இது தான். இந்த படத்தை தொடர்ந்து அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி.
இந்த படம் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது என்று சில தகவல்கள் வெளியாகின்றன. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகளில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் ஈடுபட்டுள்ளார்.
இந்த படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ரஜினி நடிப்பில் அனிருத் இசையமைத்த முதல் ரஜினி படம் 'பேட்ட’ தான். அடுத்த படத்திற்கும் அவரே இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதில் ரஜினியுடன் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், தொடர்ந்து கீர்த்தி சுரேஷும் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இருவரிடமும் பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்று வருவதாகவும், இன்னும் அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மார்ச்சில் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க இருப்பதாக வெளியான தகவலால் "ரெண்டு ஸ்டாரும் இணைஞ்சா படம் ஹிட்டு தான்"என கொண்டாட்டத்தில் உள்ளனர்.
English Summary
rajini next film with nayanthara and keerthisuresh