நாகை ரஜினி ரசிகர்களின் அதிரடி.! காப்பகத்தில் உள்ள சிறுவர்களை பேட்ட திரைப்படத்திற்கு அழைத்து சென்றனர்.!! கண்ணீருடன் சிறுவர்கள் தெரிவித்த பதில்.!!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்., நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது 10 ம் தேதியன்று திரையில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன்., திரிஷா., பாபிசிம்ஹா., சசிகுமார்., விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். 

மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படமானது உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூல் செய்து வரும் நிலையில்., படத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக திரைப்படமானது திரையரங்கில் வெற்றிநடைபோட்டு வருகிறது. 

இந்த நிலையில்., நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் அங்குள்ள காப்பகத்தில் பயின்று வரும் சிறுவர்களை பேட்ட திரைப்படத்திற்கு அழைத்து வந்து படத்தை கண்டு களிக்க வைத்தனர். காப்பகத்தில் இருந்து சுமார் 150 சிறுவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு திரைப்படத்தின் இடைவெளியில் சிற்றுண்டிகளையும் வழங்கி மகிழ்வித்தனர். 

இது குறித்து அந்த சிறுவர்களிடம் கேட்ட போது., திரையரங்கில் வந்து திரைப்படம் பார்ப்பது இதுவே முதல் முறையாகும்., இதற்கு முன்னதாக திரையரங்கிற்கு நாங்கள் வந்ததே இல்லை., எங்களை அழைத்து வந்த அனைவருக்கும் நன்றி என்று கண்ணீருடன் அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தெரிவித்தனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini fans celebrate petta movie with Orphaned children in nagapatinam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->