இவர் தமிழக அரசியலுக்கு கெடு விதிக்கிறாரா..? ஒட்டுமொத்த குடும்பத்திற்கே 18 வாரங்கள் தான் கெடுவாம்: அதன் பிறகு..? - Seithipunal
Seithipunal


ஏதோ காசில்லாதன் கடன் வாங்கியது போல வாங்கிய கடனை கட்டாமல் ரஜினியின் குடும்பம் கோக்கு மாக்கு வேலைகளை காட்டி வருகிறது.

பள்ளி கட்டிடத்திற்கு வாடகை கொடுக்கவில்லை சரி. அது ஒன்றுதான் என பார்த்தல், வால் போல நீளுகிறது மோசடி பின்னணி.

ரஜினியின் மகள் தயாரித்து வெளியிட்ட கோச்சடையான் திரைப்படத்துக்காக வாங்கிய கடனை இன்னும் திரும்ப செலுத்தவில்லையாம்.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்திடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோச்சடையான் படத்தின் தயாரிப்பு பணிக்காக ஆட்பீரோ என்ற நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார் லதா ரஜினிகாந்த்.

ஆனால் அந்த கடனில் ஒன்றரை கோடி மட்டுமே திரும்ப செலுத்தியுள்ளார். மீதி பணத்தை வழக்கம் போல செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து நிலையில் கொடுத்த கடனை திரும்ப கேட்டு அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், கடனை ஏன் செலுத்தவில்லை..?  எப்போது கடனை திரும்ப செலுத்துவீர்கள்..?  என்பன போன்ற பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

பதிலை சொல்ல அவகாசம் கொடுத்ததும், வாய் மூடி மவுனியாகவே இருந்திருகின்றனர். இதனை தொடர்ந்து திரும்ப செலுத்த வேண்டிய ரூ. 6.2 கோடி நிலுவைத் தொகையை 18 வாரங்களுக்குள் லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini family red hanged


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->