பொங்கலுக்கு பின் ரஜினி அறிவிக்கப்போகும் முக்கிய அறிவிப்பு! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்!! - Seithipunal
Seithipunal


அரசியலில் ஈடுபடப்போவதாக அதிரடியாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக கடந்த 2017 டிசம்பர் 31-ந் தேதி அறிவித்தார். மேலும், ரஜினி ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்தார்.

இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்கள், பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கவும், ரசிகர்களின் உறவினர்கள், பொதுமக்களை ஒருங்கிணைத்து ஒரே குடைக்குள் கொண்டு வருவதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற இணையதளத்தையும்,மொபைல் 'ஆப்'பையும் ரஜினி தொடங்கினார்.

 

நடிகர் ரஜினி, தனது படத்தின் புரமோஷனுக்காகதான் அரசியலுக்கு வருவதாக அவ்வப்போது அறிவித்து வருகிறார் என பலர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 15 வருடங்களாக ரஜினி அரசியலுக்குதான் வரப்போவதாக அறிவித்து வருகிறார். ஆனால், இதுவரை கட்சி ஆரம்பித்த மாதிரி தெரியவில்லை என அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வருகிற பொங்கலுக்குப் பின் என்ன செய்யப் போகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பார் என ஒசூர் அருகே உனிசெட்டி கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini Brother Press Meet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->