#கட்-வுட்: நடிகர் ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சிவா, அஜீத் கூட்டணியில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்துக்கு முதன்முறையாக டி.இமான் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜித்துடன் 4 ஆவது முறையாக நாயன்தாரா இணைந்து நடித்துள்ளார். 

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ரூபன்  எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது. பொங்கலை முன்னிட்டு விஸ்வாசம் படம்  நாளை உலகமெங்கும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதேபோல் நடிகர் ரஜினியின் பேட்ட திரைப்படமும் நாளை ரிலீஸ் ஆகிறது. இதனையொட்டி இந்த படங்கள் வெளியாகும் திரையரங்கம் முன் கட் அவுட் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையை அடுத்த பரங்கிமலையில் உள்ள ஒரு திரையரங்கில்  ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப் படமும்,  அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் நாளை வெளியாகிறது. 

இதன் காரணமாக, நடிகர் ரஜினி, அஜித்துக்கு அவரின் ரசிகர்கள், அந்த திரையரங்கு முன்பு கட்அவுட் மற்றும் பேனர்களை வைத்துள்ளனர். அஜித்திற்கு 50 அடி உயரத்தில் கட் அவுட்வும்,  ரஜினிக்கு 75 அடி உயரத்தில்  கட் அவுட்வும் வைக்க ஈடுபட்டபோது, அங்கு வந்த போலீசார், அனுமதியின்றி கட் அவுட் மற்றும் பேனர்கள்  வைக்க கூடாது என்ற கட்டுப்பாட்டை விதித்தனர்.

மேலும், கட்அவுட் மற்றும் பேனர்களை  அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு  பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாக அதிகாரிகளிடம் போலீசார் தெரிவித்தும் உள்ளனர்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini and ajith flex banner issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->