அஜித் நீங்கள் சினிமாவில் ஹீரோ, ரியல் ஹீரோ அல்ல.. திருந்துங்கள்.! அஜித்தை சாடிய தயாரிப்பாளர்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் குமார் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில் கடந்த சில மாதங்களாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வீடியோ மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து, சமீபத்தில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. அஜித்தின் முயற்சியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் நடிகர் அஜித் செய்த காரியத்தை கண்டித்ததுடன், அவரை சாடி உள்ளார். அவர் வேறு யாருமில்லை ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆண்டி இந்தியன் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா. 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற முட்டாள்தனமான வேலைகள் உங்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும் அஜித் அவர்களே, இது தவறான செயல். நீங்கள் சினிமாவில் ஹீரோ. ரியல் ஹீரோ அல்ல திருந்துங்கள் என முதலில் பதிவு செய்திருந்தார். உடனே அதற்கு எதிர்ப்புகள் கிளம்பவே அந்த பதிவை அளித்துவிட்டு, மற்றொரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

அந்த பதிவில், இது போன்ற செயல் உங்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும் அஜீத் அவர்களே சென்னை மாநகரில் இது போன்று பைக் ஓட்டியவரகள் மட்டுமல்லாமல் எதிரேவருபவர்களும் பலியாகிய பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது வாகனத்தின் பெயரே இரு சக்கர வாகனம்தான் அதை ஒரு சக்கரத்தில் ஓட்டினால் நியாயமாரே..? என கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

producer adham bava tweet for valimai making video


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->