தன்னை கடுமையான வார்த்தையால் விளாசியவருக்கு மூக்குடைக்கும் பதிலடி கொடுத்த ப்ரியா ஆனந்த்! அடுத்த கணமே நேர்ந்த ஆச்சரியம்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். அவர் சமீபத்தில் நடித்த எல்.கே.ஜி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நெட்டிசன் ஒருவன் நடிகை ப்ரியா ஆனந்தை காயப்படுத்தும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் ப்ரியா ஆனந்துடன் ஸ்ரீதேவி நடித்திருந்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை. எல்.கே.ஜி. படத்தில் ஜே.கே. ரித்தீஷ் ப்ரியா ஆனந்துடன் நடித்தார். அவரும் இறந்துவிட்டார். ப்ரியா ஆனந்துடன் சேர்ந்து நடிப்பவர்கள் அனைவரும் இறக்கிறார்கள். சக கலைஞர்களுக்கு மோசமான  கெட்ட ராசியாக ப்ரியா ஆனந்த் உள்ளார் என்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.



 

அதனை கண்ட ப்ரியா ஆனந்த்  "வழக்கமாகஉங்களை போன்ற  நபர்களுக்கு பதில் அளிக்கமாட்டேன். ஆனால் நீங்கள் கூறியது மிகவும் மோசமான ஒரு விமர்சனம் என உங்களுக்கு  தெரியபடுத்த விரும்புகிறேன்.சமூகவலைத்தளத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு இப்படி எளிதில் பேசிவிடலாம். ஆனால் நான் உங்களை தரக்குறைவாக பேசப்போவதில்லை" என பதில் அளித்துள்ளார்.



 

மேலும் மற்றொரு பதிவில் நீங்கள் நீங்கள் கூறும் கருத்து, மக்களின் வேதனையை பெருமளவில்  தூண்டலாம். எனவே  நீங்கள் அத்தகைய கருத்துக்களை முன்வைக்கும் முன் சில நொடிகள் எடுத்து எளிய மனப்பான்மை கொண்டவர்களாகவும், சிறிய அற்பத்தனமான நடத்தைகளிலிருந்து தடுத்துக்கொள்ளவும் பயிற்சி எடுங்கள் எனவும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த நபர் மன்னித்துவிடுங்கள், என் தவறை உணர்ந்துவிட்டேன். இன்று நான் எல்.கே.ஜி. மற்றும் இங்கிலிஷ் விங்கிலிஷ் பார்த்தேன். இரண்டு படங்களிலும் நீங்கள் நடித்திருந்ததால் அந்த கேள்வி என்னுள் எழுந்தது.உடனே அதை நான் அப்படியே ட்வீட் செய்தேன். நீங்கள் ட்வீட்டுகளை படிக்கமாட்டீர்கள் என்று நினைத்தேன். உங்களை காயப்படுத்தியதற்கு மன்னித்துவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.



மேலும் இதற்கு மன்னிப்பு கேட்டதற்கு நன்றி, நான் உங்களை பாராட்டுகிறேன்  என பிரியா ஆனந்த் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priya anand answered to netisan who tease harshly her


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->