பிரேமலு 2 திரைப்படம் உருவாகுமா? - வெளியானது முக்கிய அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


மலையாளத்தில் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் பிரேமலு. இயக்குனர் க்ரிஷ் ஏ. டி இயக்கிய இந்த திரைப்படத்தில் நஸ்லன் கே கபூர், மமிதா பைஜூ, ஷியாம் மோகன் எம், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்க்கவன், அல்தாப் சலீம், மேத்யூ தாமஸ் மற்றும் சங்கீத் பிரதாப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஜய் இசையில் உருவான இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி திரை அரங்குகளில் வெளியானது. வெறும் மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. 

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் ‘பிரேமலு 2’ திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalu movie 2 update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->