பற்றி எறியும் தீபிகா உடை சர்ச்சை.. போலிசில் வழக்கு.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கின்ற திரைப்படம்தான் பதான். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஹீரோயின் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். 

இந்த படம் வரும் 2023 ஜனவரி 25-இல் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், தற்போது இந்த பதான் படத்தில் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இதில், நடிகை தீபிகா படுகோன் காவிநிற உடையில் கவர்ச்சியாக இருந்ததற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

பாஜகவினர் காவி உடை அணிந்து கவர்ச்சியாக தீபிகா நடனமாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்த நிலையில், தற்போது இப்பாடல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்து மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ஷாருக்கான் ஆகியோர் மீது எஃப் ஐ ஆர் பதிவிட வேண்டும் என்று வழக்கறிஞர் சுதீப் ஓஜா பீகார் மாநிலத்தில் உள்ள முசார்பர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை வரும் ஜனவரி 3ஆம் தேதி நடக்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Complaints against Deepika padukone


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->