வசூலில் சாதனை யார்?.! பேட்டயா? விஸ்வாசமா?.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்., நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது நேற்று திரைக்கு வந்தது. இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன்., திரிஷா., பாபிசிம்ஹா., சசிகுமார்., விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது. 

இயக்குனர் சிவா, அஜீத் கூட்டணியில் நேற்று வெளியான திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்துக்கு முதன்முறையாக டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜித்துடன் 4 ஆவது முறையாக நயன்தாரா இணைந்து நடித்துள்ளார். 

இந்த இரண்டு படங்களும் திரையரங்களில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்., அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ரூ.16 கோடி முதல் 18 கோடி வரை வசூல் செய்ததாக ஆரம்ப மதிப்பீடுகளும்., வர்த்தக ஆய்வாளர்களின் கணிப்பின் படி ரூ.20 கோடி முதல் 22 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என்ற தகவலும்., சென்னையில் ரூ.88 இலட்சம் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினிகாந்தின் பேட்ட படமானது ரூ.16 கோடி வசூல் செய்ததாகவும்., சென்னை வட்டாரத்தில் ரூ.1 .12 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., உலகம் முழுவதும் வெளியான இரு திரைப்படங்களிலும்., பேட்ட படமானது நல்ல வசூலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உறுதியான தகவல் வெளியாகும் பட்சத்திலேயே வசூல் உறுதி செய்யப்படும். 

English Summary

petta & visvasam movie collection


கருத்துக் கணிப்பு

பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது



கருத்துக் கணிப்பு

பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது




Seithipunal