பேட்டையின் வசூல் இவ்வளவா?! பேட்ட குழுவினர் தல ரசிகர்களுக்கு கொடுத்த பதிலடியால் பரபரப்பு !!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பழம்பெரும் காட்சிகளாக பார்க்கப்படும் இருக்கட்சிகளான அதிமுக திமுக என இரண்டும் இருதுருவமாக எதிர்த்து நிற்பதை போன்று, எப்பொழுதும் தலயா? தளபதியா? என்ற கேள்வியும் இரு ரசிகர்களுக்கு இடையே ஆனா எதிர்ப்பும் இன்னமும் இருந்து வருகிறது.

ஆனால், ரஜினிக்கு அப்படிப்பட்ட போட்டிகள் தலதளபதியுடன் ஏற்றப்படுவது இல்லை. ஒரு பொதுவான நடிகராகவே அவர் பார்க்கப்படுகின்றார். இதனால், எப்போதும் ரஜினியின் படம் வசூலை குவிப்பது வழக்கமானதாக இருந்தது.

ஆனால், சில நாட்களாக நடிகர் ரஜினியின் படத்திற்கு அதிபயங்கரமான எதிர்ப்புகள் எழுகின்றன. அதிலும் அவரின் ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் அவரை எதிர்த்து பதிவு செய்ய காரணம் அவரது அரசியல் பேச்சு தான். ஆமாம்! திரையில் பேசும் வாசகமும், அவரை தரையில் பேசும் வாசமும் வெவ்வேறாக இருப்பது தான்.

இந்நிலையில் கடந்த 10 ம் தேதி பேட்ட மற்றும் விசுவாசம் இரண்டும் ஒரே நாளில் வெளியிடப்பட்டு கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றது. தல ரசிகர்கள் பலர் பேட்டையை விசுவாசம் வென்று  விட்டதாகவும், வசூலில் அதிக லாபம் பெற்று விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டுள்ளனர். 

இதுகுறித்து பேட்ட குழுவினர், " திரையரங்குகள் வசூல் நிலவரத்தை எங்களுக்கே தெரிவிக்காத போது, இவர்களுக்கு தெரிவித்துவிட்டார்களா? எதை வைத்து இதுபோன்ற வதந்திகளை இளைஞர்கள் வலைத்தளங்களில் பரப்புகிறார்கள்? இது வன்மையாக கண்டிக்க தக்கது!! " என கூறியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petta team says about collection of petta movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->