பேட்ட படத்தின் டீசர் யூ டியூப் சாதனை.! டீசரின் தனித்துவம்.!! பேட்ட பராக்.!! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் பேட்ட. 

இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான நடிகை திரிஷா., சிம்ரன்., நடிகர் விஜய்சேதுபதி., சசிகுமார் மற்றும் பாபிசிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சன் குழுமம் நிறுவனம் தயாரிக்கிறது.

பேட்ட படத்தின் டீசர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான நேற்று வெளியிடப்பட்டு உலகளாவிய ரசிகர்கள் மத்தியிலும்., மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் வெளியான டீசர் படைத்த சிறப்பை காண்போம். 

ரஜினிகாந்தின் 69 வது பிறந்தநாளான நேற்று சுமார் 11 மணியளவில் வெளியான பேட்ட டீசர்., சுமார் 1 நிமிடம் 32 வினாடிகள் மட்டுமே ஓடுகிறது. இந்த டீசர் வெளியான சுமார் 5 நிமிடங்களிலேயே தனது சாதனையை செய்ய துவங்கியது. 

20 நிமிடங்களில் 5 இலட்சம் பார்வையாளர்கள்., 40 நிமிடங்களில் 10 இலட்சம் பார்வையாளர்கள் என்று 24 மணிநேரத்தில் சுமார் 70 இலட்சம் பார்வையாளர்களை பெற்று யுடியூப் ட்ரெண்டிங்கில் பல சாதனைகளை பிடித்தது. 

மேலும்., டீசரில் ரஜினியின் அதே ஸ்டைல்., குறும்புத்தனம்., கோபம்., இளமை துள்ளல் என்று இன்னும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லாதளவில் ரஜினியை அருமையாக பேட்ட படக்குழுவினர் காட்டியிருந்தனர். அனிருத்தின் இசையானது நல்ல வரவேற்பை பெற்றது. 

படம் முழுக்க ரஜினி ரசிகர்களுக்காகவும்., ரஜினி வெறியர்களுக்கும்., ரஜினி பக்தர்களுக்காகவும்., காவலர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட படமாக மக்கள் மத்தியில் வெளியாகும் என்று ரஜினி வெறியினால் உருவாக்கப்பட்ட படம் என்பதில் எந்த விதமான குறையும் இருக்காது.

டீசரில் எந்த விதமான ரஜினிக்கே உரித்தான பஞ்ச டயலாக் இல்லாத பட்சத்தில்., ரஜினியின் சிரிப்பு மற்றும் அனிருத்தின் கலக்கலான இசையில் ரசிகர்கள் தொடர்ந்து டீசரை பார்த்து சந்தோசமாய் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PETTA MOVIE TEASER YOU TUBE TRENDING


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->