பேட்ட படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நடிகை.! தட்டி சென்ற நடிகை திரிஷா.!! - Seithipunal
Seithipunal


மிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தை வென்ற மீரா மிதுன்.

8 தோட்டாக்கள் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து பிரபலமானார். அதன்பின் தான் சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த  நடிகை மீரா மிதுன், அக்மார்க் தமிழ் பொண்ணு. படிப்பு, நடனம் என்று மட்டுமே இருந்த இவரை அவரது உயரமும் நிறமும் ஒரு மாடல் அழகியாக வளம் வர வைத்து இன்று நடிகையாக்கியுள்ளது.

இந்நிலையில், ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிகை திரிஷா ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடந்த ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றபின், ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போய்விட்டது. 

பின்னர் அவருக்குப் பதிலாக தான் நடிகை திரிஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது   நடிகை மீரா மிதுன், கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அதுவும், இவரை விட்டு விலகிப்போய் உள்ளது. இதன் காரணமாக சோகத்தில் உள்ளாராம்   நடிகை மீரா மிதுன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petta in meera midhun


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->