சர்ச்சைக்குரிய பதான் படத்தில்.. மாற்றமா.? தணிக்கைக் குழு அதிரடி.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தீபிகா படுகோன் ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான பதான்.

இந்த திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 25ல் வெளியாக இருக்கிறது. இதில், இடம்பெற்று இருக்கும் பேஷாராம் ரங் எனும் பாடலானது ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. இந்த திரைப்படம் இதுவரை 13.5 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியுப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. 

இதில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி உடையில் ஒட்டுமொத்த அழகையும் காட்டி ஆபாசமாக நடித்திருப்பார். இது குறித்து இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய இந்த பாடலை தணிக்கை துறை மாற்றி அமைக்க பட குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது. பாடல் காட்சிகளில் சில மாற்றங்களை செய்து மீண்டும் தணிக்கை சான்றிதழுக்கு சமர்ப்பிக்க கோரி தயாரிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pathan Movie songs May Changed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->