ரசிகர்கள் வேண்டுகோளை நிறைவேற்றிய ஓவியா! - Seithipunal
Seithipunal


களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் கலகலப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ஓவியா. இவருக்கு இந்த படங்களுக்கு பின்  பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் புகழின் உச்சத்துக்கே சென்று விட்டார். அந்த நிகழ்ச்சியால் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. 

இதனையெடுத்து, அவர் நடிக்கும் படங்களை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டபின் இதுவரை அவரின் எந்தப்படமும் வெளியாகவில்லை. அவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். 

இதனிடையே, அவரது ரசிகர்கள் ஓவியா ஹீரோயினாக நடிக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், ஓவியா சிறப்பு தோற்றத்தில் நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ரெஜினா கதாநாயகி என்றாலும் கதையை நகர்த்தும் ஒரு கவுரவ வேடம் மற்றும் இவருக்கு ஒரு பாடல் என நடனமும் ஆடியுள்ளார்.அடுத்து தனது நண்பரான ஆரவ் நடிக்கும் ராஜபீமா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆதி இருக்கிறார்.

இதற்கிடையே, தனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது, ஓவியா ஹீரோயினாக சிம்பு நடிக்கும் 90 எம்.எல் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oviya fulfilled the request of fans


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->