மங்காத்தா படம் ரீ- ரிலீஸ்..ரசிகர்கள் மகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். நடிகர் அஜித்தின் 50-வது திரைப்படம் மங்காத்தா. மங்காத்தா திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் தற்போது பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பு பெற்றது. காதல் மன்னனாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த அஜித் மங்காத்தா திரைப்படத்தின் எதிர்மறை கதாபாத்திரத்தில்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மங்காத்தா திரைப்படம் நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படமாகும். சென்னை 600028, கோவா போன்ற மசாலா திரைப்படங்களை இயக்கிய வெங்கட் பிரபு அதிரடி கலந்த திரைப்படமாக மங்காத்தா திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்கள் ஒருவரானார். மங்காத்தா திரைப்படம் அஜித்தின் பிறந்த நாள் ஆன மே 1ம் தேதி ரீ-ரிலீஸ் செயல்படும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mankatha movie release


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->