மஞ்சும்மல் பாய்ஸ் ஓ.டி.டியில் வெளியாகிறது..எப்போ? எந்த ஓடிடி பிளாட்பாம்னு தெரியுமா?.!! - Seithipunal
Seithipunal


கொடைக்கானில் உள்ள குணா குகையை மையமாக வைத்து மலையாள சினிமாவில் எடுக்கப்பட்ட திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இத்திரைப்படம் பிப்ரவரி 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அதனை தொடர்ந்து இப்படம் தமிழகத்திலும் வெளியானது.

மலையாள திரைப்படமாக இருந்தாலும் நல்லகதை மற்றும் விறுவிறுப்பான கதைகளம் அமைக்கப்பட்டு இருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் கொண்டாடினர். குறிப்பாக பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடியது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்.

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர். நடிகர் கமலஹாசன் படகுழுவினரை அழைத்து பாராட்டினார். மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரையில் உலக அளவில் 235 கோடி வசூல் செய்துள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வரும் மே 3ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இது குறித்த செய்தி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manjumel boys release ott Disney Plus Hotstar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->