நான் தனியாக இருக்கிறேன்... பேஸ்புக்கில் அழகான பெண்ணின் கவலை, தேடி போன நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி .! - Seithipunal
Seithipunal


பேஸ்புக்கில் அழகான பெண்ணின் புகைப்படத்திற்கு  லைக் போட்டு, நண்பர்கள் ஆனதற்காக நபர் ஒருவர்  பரிதாபமாக 80,000 பணத்தை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தனசேகரன்.45  வயது நிறைந்த அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

தனடிக்காரன் தினமும் பேஸ்புக் தளத்தை அதிகமாக பயன்படுத்தும் வழக்கமாக கொண்டவர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது பேஸ்புக்குக்கு காயத்ரி என்ற பெயரில் நட்புக்கான அழைப்பு வந்தது.

அதில் அழகான ஒரு பெண்ணின் புகைப்படம் இருப்பதை கண்ட தனசேகரன் , அந்த புகைப்படத்திற்கு லைக் போட்டு, அவரது நட்புக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார்.பின்னர் நாள்தோறும்  இருவரும் பேஸ்புக்கில் தொடர்ந்து  சாட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அப்போது அந்த பெண் தனக்கு திருமணம் ஆகி கணவர் வெளிநாட்டில் உள்ளார். தனக்கு வாய் பேச முடியாது,  இங்கு வீட்டில் நான் மட்டும் தனியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்  தனது சிசிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறேன் என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

உடனே தனசேகரன், தான் உதவி செய்வதாக கூறியுள்ளார், பின்னர் அந்த பெண் தனசேகரனை நாகர்கோவில் வந்துவிடுங்கள் என கூறியுள்ளார் .அதன்படி, பேருந்து நிலையத்தில் நின்ற தனசேகரனை காயத்ரியின் தம்பி என்று கூறி ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்றார்.

அங்கு மேலும் ஒரு வாலிபர் இருந்தார். 2 வாலிபர்களும் சேர்ந்து தனசேகரனை தாக்கி செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்தனர். ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.80 ஆயிரம் எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

பின்னர் போலீசாரிடம் தனசேகரன் இதுகுறித்து புகார் அளித்துள்ளார் .பின்னர் விசாரணை மேற்கொண்ட போலீசார் பொன்னுலிங்கம்,சிவலிங்கம் ஆகிய இரண்டு பேர்  பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு ஆண்களை ஏமாற்றுவது தெரியவந்ததையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man losss money by cheated in facebook


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->