மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சீதக்காதி படத்தின் மேக்கிங் வீடியோ! - Seithipunal
Seithipunal


பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் மக்கள் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் படம் சீதக்காதி. 80 வயது தோற்றமுடைய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில், பார்வதி, அர்ச்சனா, காயத்ரி மற்றும் மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். 

மேலும், அர்ச்சனா விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இன்றைய சூப்பர் சிங்கர் 6 சீசனுக்கு சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி தனது சீதக்காதி படக்குழுவினருடன் பங்கேற்றார். 



அப்போது, இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக இயக்குனர் தரணிதரன் கூறுகையில், கதைக்கு 80 வயது நிரம்பிய ஒரு நடிகர் தான் தேவைப்பட்டார். அதில், நான் நடிக்கிறேன் என்று விஜய் சேதுபதி கூறினார். அதற்கேற்ப அவரை மாற்றினோம். 



அதற்காக ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். மேலும், அந்த மேக்கப்பிற்காக கிட்டத்தட்ட 5 மணி நேரமும், மேக்கப் கலைவதற்கு 2 மணிநேரமும் தேவைப்பட்டது என்று கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

making video of vijay sethupathu in seethakathi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->