நடிகர் டி.ராஜேந்திரனின் மகன் மதமாற்றம்?! அதிர்ச்சி தகவல்!! - Seithipunal
Seithipunal


நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்திரன், தமிழ் சினிமாவில் மிகவும் பெயர் பெற்றவர். இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இவரது மூத்த மகன் நடிகர் சிம்பு இளம் வயதிலிருந்தே நடித்து வருகிறார். 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்று சிறுவயதில் அழைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இயற்பெயர் சிலம்பரசன் இவருக்கு குறளரசன் என்ற இளைய சகோதரர் ஒருவர் உள்ளார். இவர் பாண்டியராஜ் இயக்கிய 'இது நம்ம ஆளு' படத்துக்கு இசையமைத்தார்.

டி.ராஜேந்திரன் மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோரின் முன்னிலையிலேயே அவரது இரண்டாவது மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது பற்றி நடிகர் டி.ராஜேந்திரன் கேட்டபோது, "எனக்கு எம்மதமும் சம்மதம்! ஒன்றே குலம் ஒருவனே தேவன், என்ற கொள்கையை நான் பின்பற்றுகிறேன்.

எனது மகள் கிறித்தவ சமயத்தை பின்பற்றுகிறார். எனக்கு எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை உள்ளது. அதனால் தான் இவர்களின் விருப்பத்திற்கு நான் மதிப்பு கொடுத்து உள்ளேன். 

எனது மூத்த மகன் சிலம்பரசன் சிவபக்தர், குறளரசன் இஸ்லாம், மகள் இலக்கியா கிறித்துவர் அனைவருக்கும் உதாரணமாக திகழ்வதற்கு இதுவே சாட்சி" எனக் கூறியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kuralarasan Trajendhiran convert to islam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->