ஒட்டுமொத்த திரைஉலகத்தையும் திரும்பி பார்க்கவைத்த கே.ஜி.எஃப்.!! பாகுபலியை மிஞ்சப்போகும் சாதனை.!!! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் திரைக்கு வந்த கன்னட மொழி திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு பெற்று, இன்றுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. தமிழ், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்தின் வசூலை கண்டு கன்னட திரை உலகமே கதிகலங்கி போய் உள்ளது. தமிழகத்திலும் குறிப்பிட்ட அளவிற்கு இந்த கே.ஜி.எஃப் படம் வசூல் செய்துள்ளது. முக்கியமாக இந்த படத்திற்கு நல்ல ரிவீவ் கிடைத்தது படத்துக்கு வெற்றியை தேடி தந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். 

சமீபத்தில் இந்த கே.ஜி.எஃப் திரைப்படத்தின் படக்குழுவுக்கு நடிகர் விஜய் கூட வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படத்தில் கன்னட ஸ்டார் யஷ் நடித்து உள்ளார். கன்னட திரையுலகில் அதிக செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.

கே.ஜி.எஃப் படம் பாகுபலியை விட நன்றாக எடுக்கப்பட்டுள்ளதாக பேசப்பட்ட இந்த படத்தின் வசூலும் தற்போது பாகுபலியை மிஞ்ச உள்ளது. படம் 28 நாட்களாகி உள்ள நிலையில், கன்னட பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 125 கோடி வசூல் செய்துள்ளது. 

கன்னட பாக்ஸ் ஆபிஸில் 129 கோடி வசூல் செய்துள்ள படம் பாகுபலி 2 ஆகும். இதனை இன்னும் சிலதினகளில் கே.ஜி.எஃப் படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KGF BEET TO BAHUBALI


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->