வசூலில் கோட்டையை பிடித்தது யார்?.! கார்த்திக் சுப்புராஜின் காட்டமான பதில்.!!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்., நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படத்தை சன் குழுமம் தயாரித்திருந்தது. 

இயக்குனர் சிவா இயக்கத்தில்., நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

இந்த இரண்டு படங்களும் பொங்கலை முன்னிட்டு 10 ம் தேதியன்று வெளியான நிலையில்., இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் என்றாலும்., ரசிகர்களுக்கிடையே யாருடைய படத்தின் வசூல் அதிகம் என்ற போட்டியானது நிலவி வரவே., ஒரு சமயத்திற்கு மேலாக தயாரிப்பு நிறுவனங்கள் இந்த போட்டியில் களமிறங்கியது. 

இந்த விசயத்திற்கு கருத்து தெரிவித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் "உணவக விடுதிகளில் வெளியே இன்று ஆயிரம் இட்லிகள் இங்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகையை வைத்திருக்கின்றனரா? அந்த உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவு நன்றாக இருக்கிறதா? இல்லையா? அதுவே போதுமானது. 

அந்த வகையில் தான் திரைப்படங்களும்., ஒரு நடிகருக்கு வெளியாகும் திரைப்படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை திரையரங்கிற்கு சென்று பார்ப்போம். அவரவர் விருப்பத்திற்கேற்ப வசூல் நிலவரங்களை பேசிக்கொண்டு இதையே தொழிலாக நடத்தி வருகின்றனர். இவ்வாறு வரும் தகவல்களின் மூலமாக ட்ராக்கர்ஸ் வருமானம் பார்த்து வருகின்றனர் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karthick subburaj talks about pongal movie release champion


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->