தமிழ் லீக்ஸ்: ஸ்ரீரெட்டி விடயத்தில் களமிறங்கிய கடைகுட்டி சிங்கம் கார்த்தி.!! ஸ்ரீரெட்டி மீது சரமாரி குற்றச்சாட்டு.!!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு நடிகை, ஸ்ரீரெட்டி நகைகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை வெளிப்படையாக பொதுவெளியில் தெரிவித்து, நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த விடயம் தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம் சாட்டினார்.

முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருவது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இளம் நடிகர் சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். மேலும் இயக்குநர் சுந்தர்.சி, ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கினார்.

இவர்களைத் தொடர்ந்து, நடிகர் ஆதியின் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி மீது விஷால், சுந்தர் சி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக டி.ஆர் பேட்டியளித்தார். 

நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பேட்டியளித்து, முன்னணி நடிகைகளை பற்றி தகவல்களை கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் என்று தல அஜீத்தின் பெயரை குறிப்பிட்ட அவர், ''ஒரு நடிகருக்கான எல்லா தகுதி அவரிடம் உள்ளது'' என அவர் கூறினார்.

இந்நிலையில், கடைகுட்டி சிங்கம் திரைப்படம் வெற்றிபடமாக அனைத்து திரையரங்கிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது. நடிகர் கார்த்தி திருச்சி திரையரங்குக்கு படக்குழுவினருறாடும் திடீர் விசிட் அடித்தார்.

இதேபோல், புதுக்கோட்டைக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, ''கடைகுட்டி சிங்கம் படத்தை பார்த்து விட்டு துணை குடியரசு தலைவர் பாராட்டி கடிதம் எழுதி உள்ளார். இந்த விடயம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நடிகை ஸ்ரீரெட்டி எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், நடிகர்கள் மீது தினம் ஒரு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். 

ஸ்ரீரெட்டியிடம் ஆதாரம் இருந்திருந்தால், நேரடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பார், ஆனால் அவரிடம் எந்த வித ஆதாரமும் இல்லமால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஸ்ரீரெட்டி விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராக இருந்தாலும், நேரடியாக தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் புகார் மனு அளிக்கலாம்,. அப்படி அளித்தால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.'' என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARTHI OPEN TALK ABOUT SRI RETTY ISSUE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->