பலநாள் இரவு தூங்கவேயில்லை! தலைதூக்கிய பாண்ட்யா, ராகுல் விவகாரத்தால், பகிரங்கமாய் மன்னிப்பு கேட்ட பிரபலம்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா மற்றும் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் ஆகியோர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.அதனை பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குனருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். 

அப்பொழுது பெண்கள் குறித்து அவர்கள் கூறிய கருத்தால் பெரும்  சர்ச்சைகள் கிளம்பியது.மேலும் அவர்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கடும் கண்டங்கள் எழுந்தன.

அதனை தொடர்ந்து  ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல் இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடைவிதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவித்தது. பின்னர் சமீபத்தில் தற்காலிகமாக  அவர்கள் இருவர் மீதும் விதிக்கப்பட்ட தடையை கிரிக்கெட் வாரியம் நீக்கியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைதி காத்துவந்த கரண் ஜோஹர் தற்போது இதுகுறித்து கருத்து கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், இந்த விவகாரத்திற்கு நான்தான் பொறுப்பு என நான் கருதினேன். ஏனெனில், இது என்னுடைய நிகழ்ச்சி. என்னுடைய தளம்  நான் தான் அவர்களை விருந்தினர்களாக அழைத்தேன். எனவே, இந்த நிகழ்ச்சிகளில் ஏற்படும் எதிர்வினைகளுக்கு நானே பொறுப்பானவன். 

சில நேரங்களில் நிகழ்ச்சியின் மூலம் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது . ஆனால் இதன் மூலம் ரேட்டிங் அதிகமாகும் நான் மகிழ்ச்சி அடைவேன் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் அவ்வாறு கிடையாது. இதனால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.  விருந்தினர்களின் கருத்துக்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஆனால், கேள்விகளுக்கு நானே பொறுப்பாவேன். 

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் மிகவும் குற்ற உணர்ச்சியுடன் இருந்தேன். அதனால் பல நாட்கள் இரவு தூங்கவேயில்லை.  அந்த வீரர்களுக்கு சில போட்டிகள் விளையாட அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்கள் திறமையான வீரர்கள், அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் நடந்த சம்பவத்திற்கு ஹர்திக் பாண்ட்யாவும், ராகுலும் என்னை மன்னிக்கவேண்டும் என கரண் ஜோஹர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karan johar ask apologies to ragul and pandiya


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->