ரஜினியை தொடர்ந்து டிவி சேனலை தொடங்கும் கமல்! சேனலின் பெயர் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


ரஜினியை தொடர்ந்து, நடிகர் கமலும் டிவி சேனல் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் கட்சி தொடங்கி, அரசியலில் நுழைய விரும்புபவர்கள் அனைவரும் தங்களது கொள்கைகள் மற்றும் கருத்துக்களை மக்களிடையே பரப்ப, அக்கட்சிக்கு ஒரு தொலைக்காட்சி சேனல் கண்டிப்பாக தேவை என நம்பி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது  அரசியலில் களமிறங்கவுள்ள ரஜினி, சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற டிவி சேனலை தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.மேலும் ரஜினியும் அதனை உறுதிசெய்து தகவல் வெளியிட்டுள்ளார்.
 
இந்நிலையில் அவரை தொடந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பிரபல நடிகருமான கமல், நம்மவர் டிவி என்ற புதிய  சேனல் ஒன்றை துவங்க உள்ளதாக செய்திகள் பரவியுள்ளது. 

கமல் அரசியலுக்கு வரும் முன்னரே அவரது ரசிகர்கள் அவரை டிவி சேனல் ஒன்றை துவங்கும் படி கேட்டு வந்தனர். கட்சியை துவங்கிய பின்னரும் சேனலை துவங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தது. 
  
ஆனால் கமல் ஹாசன் ட்விட்டர் மூலம் மக்களிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து வந்தார். மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியையும் மக்களுடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கட்சியை வளர்த்துக்கொள்ள பயன்படுத்தினார். 
 
ஆனால் ரஜினி சேனலை துவங்க உள்ளதாக அறிவித்து உள்ளதால், கமலும் சேனலை துவங்க வேண்டும் என்ற தொண்டர்களின் கோரிக்கை வலுத்துள்ளது. இதற்கு இப்பொழுதே நம்மவர் டிவி என்றும் அவர்கள் பெயர் வைத்துவிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal starting nammavar tv channel


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->