இந்தியன் 2 திரைப்படத்தில் வில்லனாக, ரஜினி பட வில்லன்? - Seithipunal
Seithipunal


கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். இப்படத்தை சங்கர் இயக்கி இருந்தார். இப்படத்தில் ஊழலை ஒழிப்பது, அரசு அலுவலகங்களில் நடக்கும் லஞ்சம் போன்ற முறைகேடுகளை பற்றி தெளிவாக கூறியிருந்தார். கமல் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அப்போது இந்த படம் மூன்று தேசிய விருதுகள் பெற்றது. அந்த படத்தில் நடித்த கமல் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' படம் குறித்த தகவலை கமல்ஹாசன் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர் ராஜு ஆகியோர் வெளியிட்டனர். இதனைத்தொடர்ந்து, இப்படத்தில் இருந்து தயாரிப்பாளர் ராஜு விலகி கொண்டார். பின்னர், 2.௦ பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்சன் 'இந்தியன் 2' படத்தை தயாரிக்க உள்ளது.

இதனிடையே,  'இந்தியன் 2' படத்தில் கமலுடன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. நடிக்கிறார். மற்றொரு நாயகியாக தென் கொரியாவை சேர்ந்த பே சூஸியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இந்தி நடிகரும், 2.0 பட வில்லனாக நடித்த அக்‌ஷய் குமார் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian 2 villian in Akshay Kumar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->