மெர்சல்' படத்தால் மெர்சலாகிப்போன பாஜக : நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை ரெய்ட்? - Seithipunal
Seithipunal


மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிரான காட்சிகளை நடிகர் விஜய் நடித்துள்ள  ‘மெர்சல்’ படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.,தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.

தமிழக அரசை வழி நடத்தி வரும் பா.ஜ.கவின் அழுத்தம் காரணமாக தமிழக அரசு ‘மெர்சல்’ படத்திற்கு சிக்கலை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் நூறாவது படமான நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்த படத்திற்கு துவக்கத்தில் விலங்குகள் நல வாரியம் அனுமதி கொடுக்க இழுத்தடித்து வந்த நிலையில் பின்னர் அனுமதி கிடைத்தது.இதற்க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதனை அடுத்து,படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவை பெற்றிருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா ஆகிய திட்டங்களை விமர்ச்சிக்கும் வகையில் கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பா.ஜ.கவினர் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

மெர்சல் படம் தொடர்பாக பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை :-
“பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ பற்றியும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாகவும் மெர்சல் படத்தில் விமர்சனம் செய்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 தமிழக அரசை கட்டுப்படுத்தி வரும் பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் கொடுத்து அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கச் செய்யலாம். அல்லது படத்திற்கு சிக்கல் ஏற்படுத்தப்படலாம். விஜய் படத்திலுள்ள அந்தக் காட்சிகளை நீக்கா விட்டால் விரைவில் வருமானவரித்துறை ரெய்ட் விஜய் மீது நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mersel echo Income tax officials plan to Raid Actor Vijay's Home 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->